Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெற்றியீட்டியமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!:இந்திய குடியரசுத் தலைவர்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

“ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது தலைமைத்துவத்தின் கீழ் நாடு அமைதியான முறையில் விரைவாக அபிவிருத்து அடையும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் வரலாற்று ரீதியான நெருங்கிய உறவுள்ளது.இருநாட்டு மக்களுக்கும் நன்மையளிக்கக் கூடிய பல வேலைத் திட்டங்களில் இனிவரும் காலங்களிலும் இணைந்து செயற்பட நாம் விரும்புகின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version