அரசியல் தலைவர்கள் மீது சப்பாத்து வீச்சு சம்பவங்கள் பெருத்து விட்ட நிலையில் கிரீஸ் நாட்டு பிரதமர் ஜார்ஜ் பாபேந்த்ரூ மீது ஒருவர் ஷூ விசியது பரப்ரப்பாகியுள்ளது.
மக்கள் மீது பொருளாதாரச் சுமைகளைச் சுமத்திவரும் ஊழல் அரசின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் அரசின் மீது வெறுப்படைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தெசாலோனிக்கி என்ற இடத்தில் அவர் சர்வதேச கண்காட்சி ஒன்றை திறந்து வைத்தபோது நடந்தது. ஷூவை வீசியதாக 49 வயது மனிதர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரது கூட்டாளிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர் அரசாங்கத்தின் தொழிற் சீர்திருத்தம், நிதி சிக்கனம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஷூவை வீசியதாக தெரிவித்தார்.