வெனிசூலாவின் அதிபர் ஹுகோ சாவேசின் மறைவிற்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் நிகொலாஸ் மதுரோ அதிகபடியான வாக்குகளைப் பெற்று அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது சாவேஸை வெனிசூலாவின் தந்தை எனவும் அவரின் வழியில் தான் நாட்டை வழி நடத்தப்போவதாகவும் தெரிவித்தார். 1962 ஆம் ஆண்டு கரகாசில் பிறந்த மதுரோவின் தந்தை ஒரு தொழிற்சங்கத் தலைவராவர். உழைக்கும் வர்க்கத்தின் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மதுரோ உயர்தரப் பாடசாலையில் மாணவர் தலைவராக அரசியலில் ஈடுபட்டார். வெனிசூலா நாட்டின் ஊடகங்களுன் தீவிர எதிர்ப்பிரச்சாரங்களின் மத்தியில் மதுரோ வெற்றிபெற்றார். மிகக் குறைவான அதிகப்படியான வாக்குகளைப் பேற்றே அவரின் வெற்றி அமைந்தது.
தேர்தலில் 78 வீதமானவர்கள் வாக்களித்தனர். எதிர்க்கட்சி மீண்டும் வாக்குக் கணக்கீடு நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.