Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெனிசூலாவில் சாவேசின் வெற்றி ஏகாதிபத்திய எதிர்ப்பின் வெற்றி

கடந்த பல மாதங்களாக வெனிசூலாவின் தேர்தல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்தது. பொலிவாரியன் சோசலிசப் புரட்சியை நோக்க்கி தமது ஆட்சியை நகர்த்திச்செல்வதாகக் கூறிவந்த வெனிசூலாவின் அதிபர் ஹூகோ சாவேஸ் பெரும் வெற்றியீட்டியுள்ளார். 54.84 வீதமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ள சாவேஸ் வெனிசூலாவில் சோசலிசப் புரட்சி தொடரும் என தனது வெற்றிச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஏகாதிபத்திய எதிர்ப்பாளரான சாவேஸைக் கொலை செய்வதற்கும் சதிப்புரட்சி நடத்துவதற்கும் அமரிக்கா பலமுறை சதித்திட்டம் தீட்டி தோற்றுப் போனது.
சவேசிற்கு எதிராக உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் மேற்கு ஊடகங்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டன. எதிர்க்கட்சிக்கு பாரிய நிதி வழங்கப்பட்டது. இறுதியில் சாவேசின் வெற்றி லத்தீன் அமரிக்க நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆழமாக வேரூன்றி வருகிறது என்பதைப் படம்போட்டுக்காட்டுகிறது.

Exit mobile version