Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெனிசுலா வங்கி நாட்டுடைமை ஆகிறது : சாவேஸ் அறிவிப்பு!

05.08.2008.

வெனிசுலாவின் மிகப் பெரும் வங்கியான பேங்க் ஆப் வெனிசுலாவை நாட்டு டைமையாக்கப் போவதாக வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் அறிவித் துள்ளார்.

பேங்க் ஆப் வெனிசுலா, ஸ்பெயினில் உள்ள குருபோ சான்டன்டர் குழுமத்துக்கு உரிமையானது. வெனிசுலா வங்கி ஒன்றிடம் இதை விற் கலாம் என்று அக்குழுமம் ஆலோசித்து வருகிறது. இதையடுத்து பேங்க் ஆப் வெனிசுலா உரிமையாளர் களுடன் சாவேஸ் விவாதிக்க உள்ளார்.

வெனிசுலா அரசு மின் சாரம் மற்றும் எரிவாயு தொழில்களை நாட்டுட மையாக்கி உள்ளது. சிமெண்ட், தகவல் தொழில் நுட்பத் தொழிலையும் நாட் டுடைமையாக்க திட்டமி டப்பட்டுள்ளது. சாவேஸ் வகுத்துள்ள “21-ம் நூற் றாண்டு சோசலிசத்தை நோக்கி” என்ற திட்டத்தின் கீழ் தொழில்கள் நாட்டு டைமையாக்கப்பட்டு வரு கின்றன.

சான்டன்டர் குழுமத் துக்கு லத்தீன் அமெரிக் காவில் 4,500 வங்கி கிளை கள் உள்ளன. 2007-ம் ஆண் டில் இக்குழுமத்தின் லாபத் தில் மூன்றில் ஒரு பகுதி இப்பிராந்தியத்தில் இருந்து கிடைத்தது.

எனவே தான் ஸ்பெயி னில் எதிர்வினை இருக்கும் என்று சாவேஸ் கூறுகிறார்.

இந்த விற்பனை பேச்சு வார்த்தையில் ஸ்பெயின் அரசு தலையிடாது. இரு தரப்புக்கும் இடையில் மிகக் குறுகிய காலத்தில் விரைவில் தீர்வு எட்டப்படும் என்று நம்புவதாக ஸ்பெயின் துணை பிரதமர் மரியா தெரசா டி லா வேகா கூறி னார்.

Exit mobile version