25.11.2008.
வெனிசுலாவில் ஞாயி றன்று நடந்த மாகாணம் மற்றும் உள்ளாட்சி தேர் தல்களில் சாவேஸ் தலை மையில் சோசலிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்றுள் ளது. இருபது மாகாணங்க ளில் 17-ஐ சோசலிஸ்ட் கட்சி கைப்பற்றியது. இரண்டு மாகாணங்களில் இழுபறி நிலை உள்ளது.
நவம்பர் 23-ல் வெனி சுலாவில் 22 மாகாண ஆளு நர்கள் பதவிக்கும், 350 நகர மேயர்கள் பதவிக்கும் தேர் தல்கள் நடைபெற்றன. நீங் கள் யாருக்கு வாக்களிப் பீர்கள் என்பதை விட வாக் களிப்பதே முக்கியம் என்று சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் சாவேஸ் உள் ளிட்ட தலைவர்கள் பிரச் சாரம் நடத்தினார்கள். 2004-ல் வெனிசுலா சோசலிஸ்ட் கட்சி 23 மாகாணங்களில் 21-ஐயும் பெரும்பாலான நகர மேயர் பதவிகளையும் வென்றுள்ளது.
2008-ல் நடைபெற்ற தேர் தலில் சோசலிஸ்ட் கட்சி முடிவு அறிவிக்கப்பட்ட 20 மாகாணங்களில் 17-ஐக் கைப்பற்றியுள்ளது. மிராண்டா, ஜூலியா மற்றும் நுவேவா எஸ்பார்டா மாகாணங் களையும், காரகஸ் உள் ளிட்ட சில நகரங்களின் மேயர் பதவிகளையும் எதிர்க்கூட்டணி கைப்பற்றி யது. இரண்டு மாகாணங் களின் முடிவுகள் இன்று இரவு அறிவிக்கப்படும்.
நாட்டின் ஒரே அரசியல் கட்சி எங்களது சோச லிஸ்ட் கட்சி என்று சாவேஸ் ஆதரவாளர் முல்லர் கூறி னார். ஞாயிறன்று நடை பெற்ற தேர்தலில் 65 சதவீ தம் பேர் வாக்களித்தனர் என்று வெனிசுலா தேர்தல் ஆணையர் கூறினார். இத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் சில மாகாணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
ஜனாதிபதியின் நல்ல திட்டங்களை இவர்கள் சீரழிப்பார்கள் என்று அக்குயலஸ் வேரா குறிப் பிட்டார்.
இந்த வெற்றியை இது வெனிசுலாவின் வெற்றி என்று சாவேஸ் செய்தி யாளர்களிடம் கூறினார்.