Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெனிசுலாவில் சாவேசுக்கு ஆதரவாக மக்கள் பேரணி!

14.02.2008.

ஜனாதிபதியாக ஒருவர் எத்தனை முறை இருக்க முடியும் என்ற வரையறை நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வெனிசுலா தலைநகர் காரகஸில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது.

சாவேஸின் சோசலிசப் புரட்சி நிறைவடைய வேண்டும் என்றால் இந்த வரையறை நீக்கப்பட வேண்டும் என்று பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அரசியல் சட்டத்தில் உரிய திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன் ஞாயின்று மக்கள் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

பேரணியின் ஊடே சிறப்பு வண்ண வாகனத்தில் சாவேஸ் சென்ற போது, மக்களின் ஆரவாரக் கூச்சல் வானைப் பிளந்தது. ஒலிபெருக்கிகளில் எழுந்த சல்சா இசைக்கேற்ப மக்கள் நடனம் ஆடினர். சாவேஸ் பேசத் தொடங்கியவுடன் ஊசி விழுந்தால் கூட ஒலி எழும் அளவுக்கு அமைதி நிலவியது.

“எனக்கு இன்னும் நான்காண்டுகள் உள்ளன. இந்த திருத்தம் நிறைவேறினால் இந்த நூற்றாண்டில் மாபெரும் முன்னேற்றம் ஏற்படும்’’ என்று சாவேஸ் தம் உரையில் குறிப்பிட்டார்.

அவருக்கு நன்றி
“அவரால் எங்களுக்கு எல்லாம் கிடைத்தது. அவருக்கு நன்றி” என்று இரண்டு குழந்தைகளுக்கு தாயான கிரகோ ரியா எஸ்கலோனா கூறினார். சாவேஸின் சமூகத் திட்டங்களால் குழந்தைகள் வயிறார உண்கின்றன. சாவேஸ் பதவி இழந்தால் இத்திட்டங்கள் முடிந்து விடும் என்று அவர் நம்புகிறார்.

Exit mobile version