Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வீரவன்ச சாகும் வரை உண்ணாவிரதம் : ஐ.நா செயலகம் மூடப்பட்டது

இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி நீல் பூஹ்னேவை நியூயோக்கிற்கு திருப்பியழைத்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், இலங்கை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சருமான விமல் வீரவன்ச, முன்னர் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் தகவல் தருகையில், ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தின் பணிகளை முன்கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளமையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நீல் பூஹ்னேயுடன் கலந்தாலோசனை நடத்துவதற்காக அவரை நியூயோர்க்கிற்கு வருமாறு அழைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் துணைப்பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் நிகழந்த ஆர்ப்பாட்டத்திற்கு இலங்கை அரசே பின்னணியில் இருந்தது என்பது அம்பலமான பின்னர் விமல் வீரவன்ச ஊடாக மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தவிர, அனைத்துப் பேரினவாதக் கட்சிகளும் ஐக்கியநாடுகள் விசாரணைக் குழுவை எதிர்கின்றன. சிங்கள மக்கள் மத்தியில் மேலாதிக்க உணர்வு இன்றும் உச்சனிலையில்லேயே இருப்பதையும் அதனை பேரினவாதக் கட்சிகள் பயன்படுத்த முனைவதையுமே இவை எடுத்துக்காட்டுகின்றன.

Exit mobile version