இதற்கிடையே, பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் வீரபாண்டி ஆறுமுகம், குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நேற்று கைது செய்யப்பட்டார். இதுகுறித்த தகவல் சேலம் மாவட்டம் முழுவதும் பரவியது.
இதனைத் தொடர்ந்து சேலம் முழுவதும் தி.மு.க தொண்டர்கள் ஆங்காங்கே வன்முறைகளில் ஈடுபட்டனர்.
இதனால் நகரில் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சேலத்தின் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரச்சினைக்குரிய அங்கம்மாள் காலனியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, இடைப்பாடி நகர தி.மு.க. செயலாளரான ஜெயபூபதி, நேற்று மாலை பேருந்து நிலையம் எதிரே தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.