Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை : புதிய விளம்பரம்

கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் தடைசெய்யப்பட்டது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எனது திரைப்படத்திற்கும் எனக்கு ஆதரவு அளிக்கும் குரல்களால் நான் உண்மையில் நெகிழ்ச்சியடைந்தேன், ஆனால் எனது திரைப்படம் எவ்வாறு முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிரானது என்று பொருள்கொள்ளப்பட்டது என்பது எனக்கு திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் மக்களுக்கு ஆதரவான எனது அறிக்கைகள் நான் அவர்கள் மீதான நேசம் கொண்டவன் என்பதை அடையாளப்படுத்தியுள்ளது. எப்போதும் ஒரு நடிகனாக எனது கடமையின் அழைப்பிற்கு அப்பால் சென்று சமூகத்திற்கும், மனிதார்த்த விடயங்களிலும் நான் எனது ஆதரவுக்குரலை எழுப்பியுள்ளேன்.

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபடும் ஹார்மனி இந்தியா என்ற அமைப்பில் நான் இயங்கி வருகிறேன்.

ஒரு சமயத்தினர் மீது கருமை பூசும் குற்றசாட்டுகளினால் என் மனம் புண்பட்டுள்ளது என்பதோடு எனது நல்லுணர்வுகளையும் உண்மையில் அவமதிப்பதாக உள்ளது.

ஒரு சிறிய குழுவினரின் அரசியல் லாபங்களுக்காக நான் ஈவு இரக்கமின்றி ஒரு உபகரணமாக பயன்படுத்தப்படுகிறேன். உண்மையில் ஒருவர் தன்னுடைய சுயமாக இல்லாத நிலையில் பிரபலங்களின் பிம்பங்களை சிதைப்பதன் மூலம் தங்களுக்கான கவனத்தை ஈர்த்துக் கொள்வது ஒரு சிறந்த வழி, இதுவும் அதில் ஒருவகைதான் என்று நான் கருதுகிறேன்.

திரும்பத் திரும்ப இவ்வாறு நிகழ்ந்து வருகிறது. எந்த ஒரு உண்மையான, தேசப்பற்றுள்ள முஸ்லிமும் எனது திரைப்படத்தைப் பார்த்து பெருமையே அடைவார்கள். இதற்காகவே அந்தத் திரைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நான் இப்போது சட்டம் மற்றும் தர்க்கத்தின் ஆதரவை நம்பியுள்ளேன், இது போன்ற கலாச்சார பயங்கரவாதம் நிறுத்தப்படவேண்டும்.
பணம் புரளும் சாதாரண பொழுதுபோக்கு சாதனம் ஒன்றிற்கு இந்தியா போன்ற வறிய நாட்டில் இவ்வளவு விளம்பரமா?

Exit mobile version