Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விஸ்வரூபம் : அடிப்படை வாதிகளுக்கு தீனிபோடும் சினிமா மாயை

visvaroopamவிஸ்வரூபம் என்ற அமரிக்க ஆதரவு பொழுதுபோக்கு சினிமா குறித்த மிகைப்படுத்தப்ப்பட்ட சர்ச்சைகள் தமிழகத்தின் நாளந்த பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது. சினிமாவோடு வாழ்க்கை நடத்திகின்ற தமிழக மக்களின் அறியாமையை உணர்ச்சி மயத்தை வியாபாரப் பெரு முதலைகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இன்று விஸ்வரூபம் என்ற சினிமாவை முன்வைத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்து அடிப்படை வாதிகளும் மோதிக் கொள்கிறார்கள். இந்த மோதலை தமிழக அரசே திட்டமிட்டு உருவாக்குகிறதா என்ற சந்தேகங்கள் உருவாக ஆரம்பித்துள்ளன.
இப்போது மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே இத்திரைப்படம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். விஸ்வரூபம் படத்தை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வெளியிடுவதில் என்ன பிரச்சனை என்று மத்திய அரசு விசாரணை நடத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயிடம் கேட்டதற்கு, “நாம் சுந்திரமான சமூகத்தில் உள்ளோம். இங்கு கருத்து சுதந்திரம் உள்ளது. கலைஞர்களுக்கு சுதந்திரம் உள்ளது. நமக்கு என்று அரசியலமைப்பு உள்ளது. அந்த அரசியலமைப்பை அனைவரும் மதிக்க வேண்டும். கலைஞர்கள் தங்கள் பணியை செய்ய அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்ய தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதற்காக பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு விசாரணை நடத்தும்.” என்று பதில் அளித்தார்.
தமிழக மக்களை இருளுக்குள் வைத்திருக்கும் ஒரு சாதாரண பொழுதுபோக்கு சாதனம் இன்று மத அடிப்படைவாதிகளை மோதவிடுகின்ற அளவிற்கு வலிமைபெற்றுள்ளது.

Exit mobile version