பல்தேசிய வியாபாரச் சந்தைக்குள் நுளைவதற்கான அத்தனை வியாபார உக்திகளையும் பயன்படுத்திய கமலஹாசன்
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர் தலைமையில் 21 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேற்று சந்தித்து புகார் கொடுத்தனர். பின்னர், ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது: முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றுள்ள விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும். இப்படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல காட்டியுள்ளனர்.
முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இல்லை என்று கமலஹாசன் மறுத்து வந்தார். ஆனால் முஸ்லிம் அமைப்புகளுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதை பார்த்த முஸ்லிம் தலைவர்கள் கொதிப்படைந்துள்ளனர். படம் வெளியிடப்பட்டால் தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம். எனவே படத்தை தடை செய்ய வேண்டும். இதுகுறித்து கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.
இந்து பயங்கரவாதம் தலைவிரித்தாடும் ஒரு நாட்டில் முஸ்லீம்களை மட்டும் பயங்கரவாதிகளாகக் தோற்றப்படுத்தும் பெரும்பான்மைக்கான வியாபார உக்தியால் முஸ்லீம் தலைவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.