Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு சிதம்பரத்திற்கு வைக்கப்பட்ட குறி?, உளவுத் துறையின் சதி?

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலைக் கவிழுக்கும் நோக்கோடு தண்டவாளம் தகர்த்தெரியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பிய மலைக்கோட்டை ரயிலில்தான் ப.சிதம்பரம் நேற்று பயணம் செய்யவிருந்தார். ஆனால் டில்லியில் இருந்து சென்னை வந்த விமானம் காலதாமதமானதால் அவர் மலைக்கோட்டை ரயிலில் பயணிக்கவில்லை. காரைக்குடியில் நடைபெறும் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவுக்குச் செல்லும் சிதம்பரத்தை குறி வைத்தே இந்த தண்டவாளத் தகர்ப்பு நடந்திருக்கிறதா? வேறு சக்திகள் இதன் பின்னர் உள்ளார்களா? என்பது குறித்து விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

தவிர,

சீபா  ஒப்பந்ததிற்குப் பின்னதாக  தமிழ்நாட்டில்  கைதுகளை மேற்கொள்ளவும்  பாதுகாப்பைப் பலப்படுத்தவும்  மத்திய மாநில  அரசுகளே திட்டமிட்டு இவ்வாறான செயற்ப்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம் எனவும் பரவலான அபிப்பிராயம் நிலவுகிறது.  இலங்கை இனப்பிரச்சனையில் தமிழக அரசும் இந்திய அரசும் பலத்த  எதிர்ப்பை அறிவுஜீவிகள் மற்றும் படித்த இளைஞர்கள் மத்தியிலிருந்து எதிர்கொண்டு வருகிறது.  மத்திய மானில அரசுகள் எண்ணியது போல் இந்த உணர்வலையை ஒடுக்க முடியவில்லை.  இவற்றைக் கையாளும் வகையில், மக்கள் மத்தியில் எதிர்ப்பை உருவாக்கும் வகையில் இந்திய உளவுத்துறை திட்டமிட்டு மெற்கொண்ட செயலா இந்தத் தண்டவாளத் தகர்ப்பு என சந்தேகங்கள் உருவாகின்றன  என்று இந்திய இராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

Exit mobile version