Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு – பெரும் நாசவேலை.

இன்று அதிகாலை விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தர்க்கப்பட்டிருந்தது

. முன்கூட்டியே இதை அறிந்ததால் பெரும் விபத்தும் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. ஈழப் போரில் இந்தியா இனக்கொலைக்கு துணை போனது தொடர்பான அதிருப்தி தமிழகத்தில் நிலவுகிறது. இன்று இது தேர்தல் அரசியோடு முடிந்து போனாலும் இந்திய இறையாண்மைக்கு இது நீண்ட கால அச்சுறுத்தலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. உருவாகி இருகிறது என்று நாம் தொடர்ந்தும் எழுதினோம். ஜனநாயகக் குரல்களை அடக்கி ஒடுக்கும் கருணாநிதி, மன்மோகன் போன்ற அடக்குமுறை ஆட்சியாளர்களிடம் இந்தக் குரலில் பேசினால் எடுபடாது என்று ஏதோ ஒரு இளைஞர் தீவிரப்பாதையை தேர்ந்தெடுக்கக் கூடும் என்றும் யதார்த்த நிலையை சுட்டிக் காட்டினோம். அப்படியான ஒரு சூழல் தமிழகத்தில் உருவாவதற்கான எல்லா சாத்தியங்களையும் கருணாநிதி உருவாக்கி விட்டார் என்றும் தொடர்ந்து அம்பலப்படுத்தினோம். குறுகிய தமிழ் தேசியவாத் வெறி இளைஞர்களை தவறான வழியில் திசை திருப்பி விடும் என்றும் எச்சரித்தோம். இலங்கை இறையாண்மைக்காக கவலைப்படும் இந்தியா முதலில் இந்தியாவின் இறையாண்மை குறீத்து அதன் குடி மக்கள் மீது கவனம் கொள்ளட்டும் என்றும் எழுதினோம். இந்நிலையில்தான் விழுப்புரத்தில் தண்டவாளம் தர்க்கப்பட்டதற்கு தீவீர ஈழ ஆதரவாளர்கள் காரணமாக இருக்கலாம் என்று தகவலகள் வெளியாகி இருக்கலாம். ராஜபட்சேவின் இந்திய வருகைக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் அந்த இடத்தில் கிடந்ததாக மர்மத் தகல்வகளும் பரவிக்கிடக்கிறது.

உளவு நிறுவனங்களின் சதியா

?

வெளிப்படையாக அல்லாமல் மன ரீதியான வேறுபாடுகள் எதிர்காலத்தில் கொதிப்புகளாக மாறாமல் தடுக்க இம்மாதிரியான நிகழ்வுகளை அரசு உளவுப்படைகளே முன்னின்று செய்யும்

. செம்மொழி மாநாட்டு நெருங்கும் நேரத்தில் காவல்துறையினரை எச்சரிக்கும் விதமாகவும் உளவு நிறுவனங்களே இப்படி தண்டவாளத்தை தகர்த்திருக்கலாம். தமிழகத்தில் மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்புடன் உருவாகிவரும் ஈழ விவாகரத்தை நசுக்கவும். அது குறித்து யாரும் பேசாமல் செய்யவும். ஒரு எச்சரிக்கை விடுக்கவும் இது நடத்தப்பட்டிருக்கலாம். மிக முக்கியமான வரவிருக்கும் தேர்தலில் இப்போதே தேர்தல் கூட்டணி பேரங்கள் துவங்கி விட்டன. மாபெரும் இனக்கொலை நடந்து முடிந்த பின் அதற்குத் துணைபோன கருணாநிதி சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல் இது. இத்தேர்தலிலும் ஈழக் கொலைகள் பிரச்சாரக் கருவியாக முன்வைக்கப்பட்டால் அது கடந்த இரண்டு வருட தொடர் பிரச்சாரங்களின் அடிப்படையிலும் பல் வேறு தமிழ் அமைப்புகள் கிராமம் கிராமமாகச் சென்று ஈழக் கொலைகள் பற்றி பேசி வைத்திருப்பதும் கருணாநிதிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். என்பதால் ஒட்டு மொத்த ஈழ ஆதர்வாளர்களை இதன் மூலம் அடக்கி ஒடுக்கி விட முடியும். இதெல்லாம் இச் செய்திக்கான பரிமாணங்கள். ஆனாலும் மக்களை நம்பி போராடாமல் அப்பாவி மக்கள் பயணம் செய்யும் ரயிலைக் கவிழ்ப்பது, பொது இடங்களில் குண்டு வைப்பது, சாதாரண மக்கள் உயிர்களைப் பற்றி கவலைப்படாமல் அச்சுறுத்துவது போன்ற செயல்களை யார் செய்தாலும் அது கண்டிக்கத் தக்கதே.

Exit mobile version