Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விளையாட்டு அமைச்சின் 1100 கோடி ரூபாய் மோசடிகளை எடுத்து கூறியமையால் அரிஜுன ரணதுங்க பதவி விலக்கப்பட்டுள்ளார்: ஹஷான் திலகரட்ண.

25.12.2008

இலங்கை கிரிக்கட் இடைக்கால நிர்வாக சபை திடீரென விளையாட்டு அமைச்சால் கலைக்கப்பட்டது. இது கலைக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை பற்றி அபிவிருத்தி கண்காணிப்பகம் ஊடகவியலாலர் மாநாட்டில் தெளிவுப்படுத்தவுள்ளது.என அபிவிருத்தி கண்காணிப்பு நிலையத்தின் தலைவர் துட்டுகம நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அபிவிருத்தி கண்காணிப்பு நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அபிவிருத்தி கண்காணிப்பு நிலையத்தின் உறுப்பினர் துட்டுகம. இலங்கை கிரிக்கட் டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் ஹஷான் திலக்க ரட்ண,அரசியல் ஆலோசகர் ஹஷந்த மாகெதர கமகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றும் போது அபிவிருத்தி கண்காணிப்பு நிலையத்தின் தலைவர் துட்டுகம மேலும் தெரிவித்ததாவது, “கடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கிரிக்கட் ஒளிப்பரப்பு சம்பந்தப்பட்ட விடயங்களை தாஜ் தொலைகாட்சி நிறுவனத்திடம் ஒப்படைத்தமை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதன் பின்னாள் 1100 கோடி ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் ஹஷான் திலக்க ரட்ணவினால் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இவ்வழக்கு ஜனவரிமாதம் 12 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தாஜ் தொலைக்காட்சியுடன் செய்துகொண்ட உடன்படிக்கையுனூடக பல கோடி ரூபாய் நிதி மோசடி ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கமாகும்.இதனால் தான் அரசாங்கம் கிரிக்கட் இடைக்கால நிர்வாக குழுவை திடீரென கலைத்துள்ளது. கிரிக்கட் இடைக்கால நிர்வாக குழுவென்பது எல்லாருக்கும் முக்கியமானது ஒன்றாகும். ஆனால் இன்று கிர்க்கட் நிர்வாக குழுற்கு இருக்கும் பலம் மற்றும் அதை சார்ந்தவர்களிடம் இருக்கும் பலம் இன்று ஒருவரின் கைக்குச் சென்றுள்ளது.இதற்கு பொறுபாளராக விளையட்டு மற்றும் பொது விளைடாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போன்று க.பொத.சாதரணத்தர மாணவ்ர்களால் இவ்வருட கணித பரீட்சையை எதிர்கொள்ள முடியவில்லை.இது குறித்து அமைச்சிடம் கேட்ட போது அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை என கூறினார்கள் .ஆனால் கணித பாட வினாத்தாளை மீண்டும் எதிர்வரும் 17 அம் திகதி நடத்த தீர்மானித்துள்ளார்கள்.அரசிற்கு பரீட்சைகளை கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை என்பது இதனூடக விளங்குகிறது.படசாலைகளுக்கு புத்தகங்களை வழங்க முடியவில்லை வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை ஒழுங்காக வழங்க முடியவில்லை உலக சந்தையில் விலை குறைந்திருந்தும் கனிய எண்ணெய்களின் விலைக்ளை குறைக்க முடியாத அரசே காணபப்டுகிறது” எனத்தெரிவித்தார்.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் ஹஷான் திலகரட்ண உரையாற்றுகையில், “கிரிக்கட் இடைக்கால நிர்வாக குழுவின் தலைவராக் அர்ஜுனா அவர்கள் தெரிவி செய்யப்பட்டது எமக்கெல்லாம் மகிழ்சியளித்தது.ஏனெனில் அவர் சிறந்த ஒரு வீரர் ஆனால் சதிகளை மேற்கொண்டு அவரையும் விலக்கி உள்ளார்கள். இது எமக்கு வருத்தமளிக்கிறது.பிலியந்தலை கிரிக்கட் கழகத்துக்கு விளையாட்டு துறை அமைச்சர் 1.4 மில்லியன் ரூபாய் வழங்கியுள்ளார். இது தொடர்பாக அர்ஜுன ரணதுங்க அமைச்சரிடம் வினாவியுள்ளார். அதுமாத்திரமன்றை அண்மையில் பண்டார நாயக்க மாநாட்டு மண்டபத்தில் விளையாட்டு துறை அமைச்சர் காமினி லொக்குகேயில் 25 ஆவது அரசியல் வாழ்கை நிறைவு தினத்தை முன்னிடு ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் உபசார வைபவத்திற்கான விலை பட்டியலை அர்ஜுன ரணதுங்க செலுத்த மறுத்துள்ளார்.

அதேபோன்று விளையாட்டுதுறை அமைச்சரால் பங்களாதேஷ் சுற்றுக்கான அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்ட டொன் அருணசிறிசிறியை மறுத்து ரஞித் மதுரசிங்கவை நியமித்தார்.இவைதான் அர்ஜுன ரணதுங்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றி அவர் பதவி விலக காரணமானவையாகும். அதே போல் அர்ஜுன ரணத்துங்க அவர்கள் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார் ஊழல் மோசடி இடம்பெறும் இந்த கிரிக்கட் தேர்வு சபையில் என்னால் கடமையாற்ற முடியாது எனவே இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விலக்கி தரும்படி கேட்டிருந்தார்”என ஹஷான் திலகரட்ண தெரிவித்தார்.

 

 

Exit mobile version