தமிழ் நாட்டில் விலை உயர்வைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் ஜெயலலிதா அரசால் தீவிரமாக ஒடுக்கப்பட்டு வருகிறது.
பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடந்த மறியலில் காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு மாநில செயலர் ராமகிருஷ்ணன் உள்பட நூற்றுக்கணக்கானோரை கைது செய்தனர்.
சென்னை குறளகம் அருகில் சட்டமன்ற உறுப்பினர் அ.சவுந்தரராஜன் தலைமை தாங்கியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது காவல்துறையினர் நடத்திய தடியடியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முன்னதாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தினரும் அதன் துணை அமைப்புக்களும் நடத்திய போராட்டங்களும் அடிப்படை மனித் உரிமைகளை மீறும் வகையில் ஒடுக்கப்பட்டது அறிந்ததே.