பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நஷ்டங்களைச் சந்தித்து வருவதால் விலைவாசியை ஏற்று வருவதாகக் கூறிய மத்திய அரசு. பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயுவுக்கான விலைகளை தனியார் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற முடிவையும் எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அதன் கூட்டணி கட்சிகள் அனைத்துமே ஆதரவளித்துள்ளன. திமுக தலைவர் கருணாநிதியும் இந்த விலை உயர்வை ஆதரித்து மௌனமாக உள்ள நிலையில் கொல்கத்தாவில் உள்ள அசோசேம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வந்தார் அவரிடம், எதிர்க்கட்சிகளின் போராட்ட அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு திரும்பப் பெறப்படுமா என்றும் கேட்டனர். இதற்கு பதிலளித்த பிரணாப் முகர்ஜி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றார். இதற்கு முன்னர் கனடா சென்று திரும்பிய மன்மோகனிடம் விலைவாசி உயர்வு திரும்பப்பெற படுமா என்று கேட்டதற்கு “விலைவாசியை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை. மேலும் விலைவாசி உயரும்” என்று திமிராக பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.