Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விருது வேண்டாம் நேதாஜி காணாமல் போன மர்மத்தைக் கண்டுபிடியுங்கள்:குடும்பத்தினர்

Bose_Gandhi_1938இந்தியாவில் பிரித்தானியக் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தியவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ். மத்தியில் பல்தேசிய வியாபார நிறுவனங்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ள ஆளும் இந்து பாசிச பாரதீய ஜனதா அரசு சுபாஸ் சந்திரபோசிற்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறது. நேதாஜிக்கு என்ன நடந்தது, அவர் காணாமல் போன மர்மத்தை முதலில் வெளிக் கொண்டு வாருங்கள் என மத்திய அரசிடம் அவரது குடும்பத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது. ஆனால் இந்திய அரசு அவ்வறிக்கையை ஏற்கவில்லை.

உலகப்போரின் இழப்பும் இந்தியாவில் நேதாஜியின் தலைமையிலான போராட்டமும் பிரித்தானியக் காலனி ஆதிக்கத்தை நிலைகுலையச் செய்தன. பிரித்தானிய இராணுவம் மக்கள் மீது கோரமான தாக்குதல்களில் மலைவாழ் மக்கள் மீது நடத்திய நச்சு வாயுத் தாக்குதல்களும் அடங்கும். இந்த நிலையில் பிரித்தானிய அரசு தனது அடியாளான மோகன்லால் காந்தியிடம் ஆட்சியை ஒப்படைத்துச் சென்றது.

அதிகாரவர்க்கங்கள் இணைந்து காந்தியை மகாத்மாவாக்கியது. இந்தியர்கள் காந்தியை என்ற ஏகாதிபத்திய அடியாளை இந்தியாவின் தேசியத்தலைவராக்கினார்கள். காந்தியை விமர்சிப்பது கூடக் குற்றமாகக் கருத்தப்பட்டது.காந்தி சூரியத் தேவனானார். போராட்ட வீரர்கள் அழிக்கப்பட்டு இந்தியாவை ஏகாதிபத்தியங்கள் தொடர்ந்து சுரண்டுவதற்கு வழிகளை ஏற்பட்த்தியவர்கள் தலைவர்களானார்கள். புனிதப்படுத்தப்பட்டார்கள். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் உம் விடுதலைக்காகப் போராடியவர்களும் இந்திய அதிகாரவர்க்கத்தின் துணையோடு அழிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில், இந்த விருதை ஏற்க மறுத்துள்ள நேதாஜி குடும்பத்தினர், முதலில் அவர் காணாமல் போனதற்கான மர்மத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், தனது வீட்டை துறந்து, நாட்டை துறந்து, வெளிநாடுகளுக்கு சென்று தாய்நாட்டின் விடுதலைக்காக பல்வேறு நாடுகளின் தலைவர்களின் ஆதரவுடன் இந்தியாவுக்கு வெளியே ராணுவம் ஒன்றை உருவாக்கி, இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடியவர். அவரை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்.

அவர் பதக்கங்களுக்காகவோ, பாரத ரத்னா விருதுக்காகவோ தனது போராட்டத்தை நடத்தியவர் அல்ல. விடுதலை போராளிகள் தங்களது உயிரை இந்த நாட்டுக்காக தான் தியாகம் செய்தார்களே தவிர, பதக்கங்களுக்காக அல்ல.

எனவே, நேதாஜிக்கு பாரத ரத்னா வழங்கும் முடிவை மத்திய அரசு எடுக்காது என்று நான் கருதுகிறேன். ஆனால், அப்படியொரு நிலையை அரசு மேற்கொண்டால், அது, நேதாஜியை அவமதிப்பதாகும்; அவரை சிறுமைப்படுத்துவதாகும்.

நேதாஜியை அவர்கள் கண்ணியப்படுத்த வேண்டும் என்றால் அவரது மறைவு தொடர்பாக அரசிடம் உள்ள கோப்புகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version