Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விரிவடையும் துணைக்குழு அரசியல்…

ஜெனிவாவில் இலங்கை இனப்படுகொலை அரசிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றபோது அரச துணைக் குழுக்களைச் சார்ந்த பலர் கலந்துகொண்டனர். டக்ளஸ் தேவானந்தா புலம் பெயர் தமிழர்களைத் தலமை தாங்கியதாக நேரில் கண்டவர்கள் பலர் தெரிவித்தனர்.பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, சுவிஸிலாந்து போன்ற நாடுகளில் இலங்கைத் தேசிய இனப் பிரச்சனையை முன்வைத்து அகதி உரிமை பெற்றுக்கொண்டு அந்த நாடுகளில் நிரந்தரக் குடியேற்றவாசிகளான பலரையும் கூடக் காணக்கூடியதாக இருந்தது. புலம் பெயர் குழுக்கள் சிலவற்றைச் சேர்ந்த பிரதான உறுப்பினர்களும் ராஜபக்ச கிரிமினல் அரசிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டிருந்தனர். பிரான்சை மையமாகக் கொண்டு இயங்கும் தலித் முன்னணியின் தலைமை உறுப்பினரை மேல்வரும் ஒளிப்படத்தில் காணலாம்.
ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் வழிமுறை குறித்த கருத்துப் போராட்டங்கள் சமூக அக்கறை உள்ளோர் மத்தியில் நடைபெறும் அதே வேளை ஒடுக்கும் பாசிச அரசைச் சார்ந்து அரசியல் வியாபாரத்தை நடத்தும் ஒரு குழு விரிவடைந்து செல்வதையும் காணக் கூடியதாக உள்ளது. பேரினவாதியாக மட்டுமன்றி முழுத் இலங்கையையுமே சூறையாடும் பாசிச ராஜபக்ச குடும்பத்தின் விசுவாசிகளாக உருவாகியிருக்கும் இந்தக் கும்பல்கள் மொத்த சமூகத்தினதும் விரோதிகளாக மாறி வருகின்றனர்.

Exit mobile version