Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விரிவடையும்  இனச்சுத்திகரிப்பு  : மலையகத்திலும்  கட்டாயக் கருத்தடை

மலையகத்தில் இடம்பெற்று வரும் கட்டாய கருத்தடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் முரளி ரகுநாதன் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

மலையகப் பகுதிகளில் பல வருட காலங்களாக தமிழின அழிப்பை திட்டமிட்டு செயல்படுத்திவரும் அமைப்புக்களுக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி கந்தப்பளை – கோட்லோட்ஜ் தோட்ட சுகாதார நிலையத்தில் நுவரெலியாவில் இருந்து உடல் நல வைத்திய அதிகாரி, தோட்ட நிர்வாகத்தை சேர்ந்த நலன்புரி உத்தியோகத்தர், குடும்பநல மருத்துவ மாது ஆகியோர் நேரடியாக சென்று டெங்கு பரிசோதனைக்கு சிகிச்சையளிப்பதாக கூறி கோட்லோட்ஜ் தோட்ட 18 வயதிற்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கருத்தடை செய்துள்ளதாக முரளி ரகுநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அதனை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவரிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கட்டாய கருத்தடையின் பின்னணியில் உள்ளவர்கள் சட்டத்தின் முன் தட்டிக்கப்பட வேண்டும் என புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் முரளி ரகுநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version