சிறீ லங்கன் ஏர் லைன்ஸ் என்ற நிறுவனம் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட பிரித்தானிய அரசிற்கு வரிகட்டும் நிறுவனம். இது தொடர்பான தகவல்கள் விலாவாரியாக பிரித்தானிய கொம்பனி ஹவுசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இருளுக்குள் புதைந்திருந்த இந்த உண்மையை வெளிப்படுத்தும் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
கடந்த வருடத்திற்கான கணக்கு பிரித்தானிய கொம்பனி ஹவுசில் சிறீ லங்கன் ஏர் லைன்ஸ் பதிவு செய்துள்ளது.
இலங்கை அரசின் பங்கு 40 வீதமும் தனியார் முதலீடு 60 வீதமும் என்று இலங்கையில் கூறப்படும் சிறீ லங்கன் ஏர்லைன்சின் முழுமையான நிதி நடவடிக்கைகளும் சட்டவிரோதமாக இலங்கைக்கு வெளியில் மேற்கொள்ளப்படுகின்றது.
ராஜபக்சவின் ஊழல் பேரரசு தனது நாட்டின் தேசிய விமானச் சேவையை தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், அடியாட்களுக்கும் பங்குபோட்டுள்ளது.
இலங்கையில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட பங்குதாரர்களின் அறிக்கை பிரித்தானிய கொம்பனி ஹவுசில் சமர்ப்பிக்கப்பட்ட பங்குதாரர்களின் அறிக்கைக்கு முற்றிலும் வேறுபட்டது. பல பில்லியன்கள் பெறுமதியுள்ள இந்த வியாபாரத்தில் பிரித்தானிய அரசிய மட்டங்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
சிறீ லங்கன் ஏர்லைன்சின் பிரித்தானியப் பிரிவைத் தொடர்புகொண்டு இது தொடர்பாகக் கேள்வியெழுப்பிய போது தமது நிறுவனம் முழுமையாக இலங்கையைச் சார்ந்த நிறுவனம் என்றும் மேலதிக தகவல்கள் தமக்குத் தெரியாது என்றும் தெரிவித்தனர்.
ஏர்லைன்சின் லண்டன் மதிப்பு £279,115,152 பவுண்ஸ்கள் அதாவது 2.79 பில்லியன் பவுண்ஸ்கள் என கொம்பனி ஹவுஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வளவு பெரும் தொகையான திருட்டுச் சொத்தை பிரித்தானிய அரசு தனது எல்லைக்குள் வைத்துக்கொண்டு இலங்கை அரசைத் தண்டிக்கப் போவதாகக் கூற அதனை நம்பும் நம்பக்கூறும் தமிழ்த் தலைமகளை என்னென்பது?
அமெரிக்காவில் நடைபெற்ற கூத்தாட்டம் ஒன்றில் சஜின் வாஸ் குணவர்தனவால் நையப் புடைக்கப்பட்ட கிரிஸ் நோனிஸ், முன்னை நாள் ஜனாதிபதி பிரேமதாசவின் அடியாள் பாஸ்கரலிங்கம் உட்பட ராஜபக்சவிற்கு நெருக்கமான பலர் சிறீ லங்கன் ஏர்லைன்சின் லண்டன் தலைமையகத்தில் இயக்குனர்கள்.
இலங்கை ரெலிகொம் சேவைக்கும், விமானச் சேவை ஊழலுக்கும் புலம்பெயர் தமிழ் வியாபார நிறுவனங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன என்பதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
ஒரு நாட்டின் தேசிய விமானச் சேவையையே கடத்தி அன்னிய நாட்டில் நட்டுவைத்து கொள்ளையடிக்கும் இனக்கொலையாளி ராஜபக்ச கும்பலுக்கு பிரித்தானியாவும் துணைபோகிறதா என்பது விசாரணைக்கு உட்படுத்தபட வேண்டும்.
அப்பாவி உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை எந்தக் கூச்சமுமின்றிக் கடத்திக் கொள்ளையடித்த இக் கும்பல்கள் இலங்கையில் மக்களிடம் சென்று வாக்குக் கேட்கின்றன.
சர்வாதிகாரி ராஜபக்சவின் பகல் கொள்ளை தொடர்பாக பிரித்தானிய அரசிடம் முறையிடும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். உலகின் மிகப்பெரும் பகல் கொள்ளையான இக் கடத்தல் தொடர்பான வழக்குகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதற்கான முனைப்புக்களை இனியொருவின் வாசகர்கள் சிலர் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
சிறீ லங்கன் ஏர் லைன்சில் கிரிஸ் நோனிசின் பங்குகளின் மொத்தப் பெறுமதி : £247,837 (http://companycheck.co.uk/director/904783280 )
சிறீ லங்கன் ஏர் லைன்சில் ராமலிங்கம் பாஸ்கரலிங்கத்தின் பங்குகளின் மொத்தப் பெறுமதி : £56,113,690,000
( http://companycheck.co.uk/director/904725839 )
http://companycheck.co.uk/search/results?SearchCompaniesForm[name]=SRI+LANKAN+AIRLINES+LIMITED+&yt3=
http://companycheck.co.uk/director/911540190/ANTHONY-NISHANTHA-WICKRAMASINGHE/directors-secretaries
தொடர்புடைய பதிவுகள்: