Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விதைக்கப்பட்ட பயங்கரவாதம் அறுவடை செய்யப்படுகிறது : பிரஞ்சுக் காவலர்கள் பலி

libiyaலிபியா தலைநகர் திரிபோலியில் பிரான்ஸ் தூதரகம் மீது நேற்று வெடிமருந்து நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் இரண்டு பிரஞ்சு நாட்டு காவலர்கள் கொல்லப்பட்டுள்ளதாக லிபிய பாதுகாப்புப்படைகள் அறிவித்துள்ளன.

தூதரகத்தின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் திடீரென வெடித்தது. தீவிரவாதிகள் ரிமோட் மூலம் இதை இயக்கியுள்ளதாக தெரிகிறது. இதில் தூதரகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. தூதரக கட்டிடத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் பலத்த சேதமடைந்தன. சாலையில் பதிக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களுக்கு சேதம் ஏற்பட்டதால் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கியது.
ஏகாதிபத்திய நாடுகளால் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளின் துணையோடு ஆக்கிரமிக்கப்பட்ட லிபியாவில் தொடர்ச்சியான மக்கள் அழிவும் இரத்தக்களரியும் நாளாந்த நிகழ்வாகிவிட்டது.

லிபியாவின் நீண்டகால சர்வாதிகாரி கடாபியின் அழிவின் பின்னர் லிபியாவை ஆக்கிரமித்த ஏகபோக அதிகாரங்களும் லிபிய அரசும் அவர்கள் உருவாக்கிய போர்க்களத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையிலுள்ளனர்.

Exit mobile version