30 வருட ஆயுதப் போராட்டத்தையும் அதன் வழிமுறைகளையும் விமர்சிப்பதற்கு தயாமாஸ்டரிலிருந்து எரிக் சொல்ஹையும் வரைக்கும் பல காளான்கள் முளைத்துள்ளன. விமர்சிப்பவர்கள் இரண்டு வகையினர் முதலில் ஆயுதப் போராட்டமும் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையும் சாத்தியமற்றது என்று கூறவும் அரசினதும் ஆளும்வர்க்கத்தினதும் காலடியொல் விழுந்து வணங்கி கிடைப்பதைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறும் பிழைப்புவாதக் கூட்டம். தயாமாஸ்டர், கருணா, டக்ளஸ், விக்னேஸ்வரன் என்று நீளும் இந்த வரிசை விரிந்து செல்கிறது. தமது பிழைப்புவாத நலன்களுக்காக தவறுகளை இந்தக் கும்பல் பயன்படுத்திக் கொள்கிறது.
சுயநிர்ணைய உரிமைக்காகப் போராட வேண்டும் என்ற உறுதிகொண்ட, இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியங்களின் அழிவுகளுக்கு எதிராகவும் போராடுகின்றவர்கள் கடந்த காலப் போராட்டத்தை விமர்சிப்பது தேவையான ஒன்று. எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தும் நோக்கிலான மக்கள் நலன் சார்ந்த இவ்வகையான விமர்சனங்கள் அவசியமானவை.
தயாமாஸ்டர் போன்ற பிழைப்புவாதிகளுக்கும் எரிக் சொல்கையிம் போன்ற ஏகபோகங்களின் ஊழியர்களுக்கும் போராட்டம் குறித்து விமர்சிக்க எந்த உரிமையும் கிடையாது.