Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விடுதலைப் புலிகள் மீதான தடையை ஆதரித்து ஜெயலலிதா அரசு ஆவணங்கள் சமர்பித்தது

விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சட்ட விரோத நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சார்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்புக்கு சரியான காரணங்கள் உள்ளதா, இல்லையா என்பது தொடர்பாக சட்ட விரோத நடவடிக்கைகள் தீர்ப்பாயம் சென்னையில் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் விசாரணை மேற்கொண்டது.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற விசாரணையில், தமிழக கியூ பிரிவு எஸ்.பி. சம்பத் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

இந்த ஆவணங்கள் 2 பெரிய தொகுப்புகளாக சீல் வைக்கப்பட்ட உறைகளில் அளிக்கப்பட்டன.

அதில் விடுதலைப்புலிகளும், அதன் ஆதரவு அமைப்புகளும் மேற்கொண்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் என்று அவர் கூறினார்.

மேலும் விடுதலைப் புலிகளின் அரசியல் அணியான மக்கள் முன்னணி சார்பில் தமிழகத்தையும், ஈழத்தையும் இணைத்து விரிந்த தமிழகம் அமைக்கும் திட்டம் இருப்பதாகவும், அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சம்பத் கூறினார்.

Exit mobile version