Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் களைந்து சரணடைய வேண்டும்:ஐ.நா. பாதுகாப்பு சபை கோரிக்கை.

இலங்கையில் மோதல் நடக்கும் பகுதிகளில் விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள் என்று
குற்றம்சாட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில், விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் களைந்து சரணடைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் முகமாக சர்வதேச உதவி நிறுவன்ங்கள் யுத்தப் பிரதேசங்களில் சென்று உதவிகள் வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசிடம் ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் கூடுதலான சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.

Exit mobile version