Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விடுதலைப் புலிகளின் பணம் : சுவிஸ் அரசாங்கம் விசாரணை

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் வாழும் 12 விடுதலைப் புலி உறுப்பினர்கள் நெதர்லாந்து மற்றும் இலங்கைக்கு பணம் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள புலிகளின் நிதிப் பொறுப்பாளரிடம் சுவிஸ் அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்துவார்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.

விசாரணைகளுக்காக இலங்கைக்கும் சுவிஸ் அதிகாரிகள் விஜயம் செய்ய உள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஸ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட 25 பேரிடம் இலங்கையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. சுவிஸ் தமிழர்கள் போலியான மோசடியான முறையில் வங்கிகளில் கடன் பெற்றுக் கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என சுவிஸ் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போலியான சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version