Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விடுதலைப் புலிகளால் தமது பகுதியில் தடுத்து வைத்திருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்குமாறு மீண்டும் நாம் கோருகின்றோம்:அவுஸ்திரேலியா

21.03.2009

அவுஸ்திரேலியா, விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைளை கண்டிக்கிறது. அவர்கள் தமது பகுதியில் தடுத்து வைத்திருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்குமாறு மீண்டும் நாம் கோருகின்றோம். மோதல் பகுதியில் மக்களின் சுதந்திரமான நடமாட்டம் தடுக்கப்படுவதனை நியாயப்படுத்த முடியாது. வெளியேற விரும்புகின்றவர்களால் மேலும் உயிரிழப்பு தடுக்கப்படுவதால் நாம் இதனை வரவேற்கின்றோம்.

இலங்கையில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி நிலைமை குறித்து அவுஸ்திரேலியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார்

இந்த மனிதாபிமான நெருக்கடி நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் கவனம் திரும்பியுள்ளதை நாம் வரவேற்பதுடன் மோதலில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படுவது தொடர்பில் அவர்களுடன் நாமும் கவலையடைகின்றோம். இந்த நிலைமை மிக அபாயகரமானதாகும். இங்கு மோதல் தொடர்ந்து அதிகரிப்பதால் மனிதாபிமான நெருக்கடி மோசமடையும் சாத்தியம் மேலும் எழுந்துள்ளது.

இதேவேளை, இலங்கையின் தெற்குப் பகுதியில் கடந்த 10 ஆம் திகதி மத ஊர்வலத்தில் அமைச்சர்களையும் ஏனையோரையும் இலக்கு வைத்துத் தாக்கப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம்.

மோதல் பகுதியிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் இடங்களில் உடனடியாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், இரு தரப்பினரும் பொதுமக்களை ஆபத்துக்குள்ளாக்காமல் பொறுப்புணர்வுடன் அவதானமாக நடத்த வேண்டுமென கேட்கின்றதுடன், பொதுமக்கள் எங்கு இருக்கின்றார்களோ அங்கு சுடுகலன்களை பிரயோகிக்க வேண்டாமென கோருகின்றோம்.

மோதல் பகுதியின் சுகாதார நிலைமை தொடர்பில் அவுஸ்திரேலியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினர் இதற்கு அவசர முன்னுரிமையளித்தால் உணவு மற்றும் மருந்து விநியோகத்தை அவுஸ்திரேலியா உறுதிப்படுத்தும்.

மோதல் பகுதியிலுள்ள நோயாளர்கள் மற்றும் காயப்பட்டவர்களை வெளியேற்ற அரசாங்கமும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு கேட்கின்றோம்.

அத்துடன் அரச மற்றும் உலக உணவுத் திட்ட உணவு தொடரணி மற்றும் கப்பல்களைத் தொடர்ந்து அனுமதிக்குமாறும் வலியுறுத்துகின்றோம்.

மேலும் அரசாங்கம் எந்தவித தாமதமுமின்றி உடனடியாக தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மையினரை உள்ளடக்கிய அரசியல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென நாம் கோருகின்றோம்.

இலங்கையின் சுபிட்சத்துக்கும் நீண்டகால பாதுகாப்புக்கும் சகல இலங்கையரினதும் நியாயபூர்வ அபிலாசைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வு அவசியமானதாகும்.

 

Exit mobile version