Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விடுதலைப்புலிகளுடன் யுத்தநிறுத்தத்திற்கு செல்லவேண்டிய தேவை இல்லை!:கோத்தபாய .

சிறீலங்கா அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் யுத்தநிறுத்தத்திற்கு உடன்படபோவதில்லை என சிறீலங்கா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் செவ்வாய்கிழமை காலை மும்மொழிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விடுதலைப்புலிகள் யுத்தகளமுனைகளில் பலவீனமான நிலையில் ஏனமனதாக யுத்தநிறுத்தத்திற்கு அறிவித்துள்ளதாகவும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு விடுதலைப்புலிகளுடன் யுத்தநிறுத்தத்திற்கு செல்லவேண்டிய தேவை இல்லை எனவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

அவர்மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகள் முதலில் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தால் மாத்திரமே அவர்களை நம்பலாம் எனவும்குறிப்பிட்டிருக்கிறார்.   அரசாங்க சமாதான செயலர் டொக்ரர் ரஜீவ விஜயசிங்க கருத்து தெரிவிக்கையில் இவ்அறிவிப்பு நோர்வே ஊடாக வரவேண்டும் எனவும் எமக்கு சமாதானம் வேண்டும் எனவும் அவர்கள் உண்மையில் அவ்வாறு யுத்தநிறுத்தத்திற்கு வருவதாக இருந்தால் நேரடியாக தம்பிடமோ அல்லது நோர்வே சமாதானதூதுவர்கள் ஊடாகவோ தெரிவித்திருப்பார்கள் எனவும் எனினும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் எனவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை

யுத்த நிறுத்தம் தொடர்பில் அரசாங்கத்திற்கு எவ்வித பொறுப்புக்களும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமாக அறிவித்துள்ள போர்நிறுத்தம் தொடர்பாக அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த யுத்த நிறுத்தம் தொடர்பில் நோர்வே அரசாங்கமும் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Exit mobile version