புதன்கிழமை, 02 யூலை 2008, 12:26.53 PM GMT +05:30 ] |
சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் பாதுகாப்புக்கென விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் புதிய பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டு உரையாற்றிய சந்தர்ப்பத்தில் அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார். |
இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 31 ஆவது பொலிஸ் மா அதிபர் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் நாட்டில் தலைதூக்கியுள்ளதாகவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸ் சேவையைக் கௌரவமான சேவையாக மாற்றுவதற்கு சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என புதிய பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். |