லிபியா அதிபர் கடாபி கொல்லப்பட்டதில் பெரும் பங்கு அமெரிக்காவையே சாரும், அமெரிக்காவே அதற்கு அதிக அளவு பங்கு வகிக்கிறது என்றும், இதில் கடாபியை எந்தவித நீதிமன்ற விசாரணையும் இன்றி கொன்று விட்டனர் என்றும் ரஷ்ய பிரதமர் புடின் குற்றம் சாட்டினார்.
மேலும் அமெரிக்காவின் அதிரடிப்படையினர், எதிர்க் கட்சியினர் என்ற போர்வையில் இயங்கியவர்களையும், எதிர்ப்பு படையினரையும் ஒன்று சேர்த்து போரிட்டனர் என்றும், புடின் கூறினார். மேலும் கடாபி கொல்லப்பட்ட சம்பவம் கேலிக்கூத்தான செயல் என்றும், புடின் குற்றம் சாட்டினார்.