Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விக்னேஸ்வரன் எங்கே?

cvwபுலிகளின் பிடிக்குள் சிக்கியிருந்தமையால் தம்மைப் போன்றவர்கள் அரசியலில் ஈடுபட முடியவில்லை என்று கூறி அரசியலுக்குள் நுளைந்த முன்னை நாள் நீதிபதி கடந்த ஜனவரி 8ம் திகதியின் பின்னர் தமிழ்த் தேசியவாதியானார். இலங்கை அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவைப் போன்று இனப்படுகொலைத் தீர்மானத்தை வட மாகாண சபையில் விக்னேஸ்வரன் நிறைவேற்றினார்.

ஜெயலலிதாவும் விக்னேஸ்வரனும் புலம்பெயர் நாடுகளிலிருந்து புலிகளின் பெயரால் பிழைப்பு நடத்தும் குழுவினருக்கு தீனி போட்டனர். இவர்கள் இருவரிடமும் எந்த அரசியல் திட்டமும் இருந்ததில்லை சிலரைத் திருப்திப்படுத்துவதற்கான வெற்று முழக்கங்கள் மட்டுமே இருந்தன.

ஒரு புறத்தில் இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றிய விக்னேஸ்வரன் மறுபுறத்தில் சுன்னாகத்திலிருந்து நடத்தப்பட்ட இனவழிப்பிற்கு ஆதரவு வழங்கினார். பிழைப்புவாதிகளுக்கு வெற்றுச் சுலோகங்களே முக்கியம் என்பதால் விக்னேஸ்வரனின் இனவழிப்பு ஆதரவைக் கண்டும் காணாதவாறு நடந்துகொண்டனர்.

விக்னேஸ்வரனின் கடந்தகாலத்தை மறைத்து புலம்பெயர் குழுக்கள் விக்னேஸ்வரனை அரவணைத்துக்கொண்டன. புலம்பெயர் மக்களாலும் புலத்திலுள்ள தமிழர்களாலும் நிராகரிக்கப்பட்ட குழுவினர், விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியவாதியாக்கினர். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை தமிழ்த் தேசியமாக்கி இனவாதமாக்க விக்னேஸ்வரன் புலம்பெயர் குழுக்களுக்கு உதவினார்.
பிரித்தானியாவிற்கு அழைக்கப்பட்ட விக்னேஸ்வரனுக்கு பெரும் வரவேற்ப வழங்கப்பட்டது. பாராளுமன்றத் தேர்தலின் சற்று முன்னான காலப்பகுதியில் கஜேந்திரகுமாருக்கு மறைமுக ஆதரவை வழங்கிய விக்னேஸ்வரன் தேர்தலில் தனது கட்சியான கூட்டமைப்பை ஆதரிக்கவில்லை.

தேர்தல் தினத்தன்று கொழும்பில் வாக்களித்துவிட்டு காரில் வெளியே வந்த விக்னேஸ்வரன் தேர்தல் முடியும் வரை தாம் கருத்து வெளியிட்ப்போவதில்லை என நம்பிக்கையுடன் கூறினார்.

தேர்தல் நிறைவடைந்து மகிந்த, பொதுபல சேனா என்று அனைத்துக் கட்சிகளும் கருத்துக்களை வெளியிடுள்ளனர். விக்னேஸ்வரனை இன்னும் காணக்கிடைக்கவில்லை.

Exit mobile version