ராஜித சேனாரட்ன போன்ற பேரினவாதிகள் சிங்கள மக்களிடமிருந்து தமிழ் மக்களின் அவலங்களை மறைப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிக்கு இன்றைய அவரது எதிர்ப்புக்குரலே சாட்சி. சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்தை முன்வைத்தே வாக்குப் பொறுக்கும் கட்சிகள் தம்மை இடதுசாரிகள் என அழைத்துக்கொள்கின்றனர். ஜே.வி.பி, முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற கடைந்தெடுத்த இனவாதிகள் கூடத் தம்மை இடதுசாரிகள் என்றும் மார்க்சிஸ்டுக்கள் என்றும் அழைத்துக்கொள்கின்றனர்.
இந்த நிலையில் சீ.வீ.விக்னேஸ்வரன் நிறைவேற்றிய தீர்மானம் சிங்கள மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது அவசியம். சிங்களப் பேரினவாதிகளிடமிருந்தும், தமிழ் இனவாதிகளிடமிருந்தும் திட்டமிட்டு நடத்தப்படும் அழிவுகளிலிருந்து மனித குலத்தின் ஒரு பகுதியை மீட்படதற்கான ஆரம்பப் புள்ளியாக இது அமையலாம்.
இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் என மக்களின் பணத்தை ஏப்பம்விட்ட புலம்பெயர் அமைப்பு ஒன்று புலம்பெயர் நாடுகளில் பணம் சேர்க்க ஆரம்பித்துள்ளது.
விக்னேஸ்வரனின் அறிக்கையை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான மக்கள் உழைப்பின் ஒரு பகுதியாவது பயன்படுமானால் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்திற்கு வலுவான அடித்தளத்தையிட்டவர்களாவோம்.