சிங்கள் மக்கள் மத்தியில் தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக அவ்வப்ப்போது குரலெழுப்பிவரும் விக்கிரமபாகு கருணாரத்ன மீது நேற்று கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது
கொம்பனித்தெருவில் அமைந்துள்ள அவரது கட்சிப் பணிமனையில் நடைபெறவிருந்த முக்கிய பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கொழும்பு மாநகரசபைக்கு அருகாமையில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத நபர்கள் இவருடைய வாகனத்தை மறித்ததோடு இவருக்கு மரண அச்சுறுத்தலையும் விடுத்துள்ளனர்.