ஒரு புறத்தில் தன்னார்வ நிதியும் மறுபுறத்தில் விளம்பரங்களும் போடும் தீனிக்கு இவர்கள் இணைய வாசகர்களின் தொகையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கின்றனர். மக்களுக்குப் பொய்யான விமபத்தை வழங்குகின்றனர் என்பதையோ அன்றி அவர்களைக் கொலைக்களத்திற்கு நடத்திச் செல்கின்றனர் என்பதையோ இவர்கள் சிந்திப்பதில்லை.
மக்களை உணர்ர்சிவயப்படுத்தி வெறியூட்டும் இணைய ஊடகங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியலில் சாபக்கேடாக முளைவிட்டிருக்கின்றன.
நேற்று விக்கியின் வால்களாக நீண்டிருந்த பலர் இன்று மக்களின் எதிர்ப்பதால் விக்கியைத் துரோகியாகப் பட்டியலிடுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பிரச்சாரம் செய்த பல அடிமட்ட உறுப்பினர்கள் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுகிறார்கள். தாக்கப்படுகிறார்கள். ஊடகங்களால் முன்னிறுதப்பட்ட விக்கி குழுமம் மகிந்தவின் அரண்மனையை வலம்வருகின்றது.
நேற்றுவரை விக்கியின் அடியாட்படைகளாகச் செயற்பட்ட ஊடகங்கள் பாதிக்கப்படும் காட்டிக்கொடுக்கப்பட்ட ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் பொறுப்புக்கூற வேண்டும்.
விக்கியும் அவரின் ஊதுகுழல் ஊடகங்களும் கைவிட்ட அப்பாவிகள் மக்கள் சார்ந்த அரசியல் தலைமையை சுயநிர்ணய உரிமைக்காகப் போராட உருவாக்கவேண்டும்.