‘எதிர்வரும் 7ம் திகதி திங்கட் கிழமை காலை 9 மணிக்கு ஜனாதிபதி முன்னிலையில் அலரி மாளிகையில் விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.’
என்று அறிவித்ததும் கூட்டமைப்பிலுள்ள ஏனைய குழுக்கள் உற்சாகமடைந்துவிட்டன. ரெலோ அமைப்பு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் நிகழ்வைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிக்க ஏனைய சில உறுப்பினர்களும் எதிர்க்க ஆரம்பித்துவிட்டனர்.
விக்னேஸ்வரன் யார், கூட்டமைப்பும் அதன் முன்னே தேசியம் பேசி பதவிகளைக் கைப்பற்றிய சம்பந்தன் வாழ்ந்து வழர்ந்த தமிழரசுக் கட்சி என்ன என்ற குறைந்தபட்ச வரலாறு கூடத் தெரியாமல் தேர்தலுக்காக ஒட்டிக்கொண்ட இக் கட்சிகள் இன்று கூச்சலிடுவதில் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.
விக்கி இறந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலியை மகிந்த முன்னால் செலுத்திவிட்டு சத்தியப்பிரமாணம் எடுத்தால் இன்னொரு கூட்டம் அரோகரா போடத் தாயாராகிவிடும்.
விக்கியும், சம்பந்தனும், சுமந்திரனும் இணைந்து சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு மரணதண்டனை விதிக்கிறார்கள். அதற்காக கொலையாளி மகிந்தவைக் கூட்டிவருகிறார்கள்.