உரையின் மற்றைய முக்கிய பகுதி பாராட்டுதல்களுக்கு உரியது, வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் சுய நிர்ணைய உரிமைக்கு உரித்தானவர்கள் என்பது. இக்கருத்திற்கு இலங்கை முழுவதும் தமிழர்களே வாழ்ந்தார்கள் என்பதற்கும் எந்தத் தொடர்ப்பும் கிடையாது.
இலங்கையில் மன்னர்களின் நில உடமை ஆட்சி பகுதியாக முடிவடைந்து தேசிய இனங்கள் தோற்றம் பெற ஆரம்பித்த பின்னர் இலங்கை நான்கு தேசிய இனங்கள் வாழும் நாடாக மாறிப்போனது. இலங்கை வடகிழக்குத் தமிழர்கள், மலையக மக்கள், இசுலாமிய தமிழர்கள் மற்றும் சிங்கள மக்கள் என்ற நான்கு தேசங்கள் இணைந்த நாடு. இந்த நான்கு தேசங்களும் ஒரே தொடர்ச்சியான நிலப்பரப்பிற்குள் வாழும் வெவ்வேறு தேசிய இனங்கள். இத் தேசிய இனங்கள் இணைந்த கூட்டாட்சியா அன்றி தனியாகப் பிரிந்த வெவ்வேறு நாடுகளா என்பதை அந்த மக்களே தீர்மானிக்க வேண்டும்.
இதனை சிங்கள மக்களுக்கும், ஏனைய தேசிய இனங்களுக்கும் கற்பித்தலின் ஊடாகவே இலங்கை என்ற நாட்டில் உழைக்கும் மக்கள் கூட தமக்கு எதிரான ஒடுக்குமுறையைப் புரிந்துகொள்வார்கள்.இதனை விடுத்து இனவாதத்தைத் தூண்டி ஒடுக்கப்படும் தேசிய இனங்களைத் தனிமைப்படுதும் வகையில் கருத்துக்களைப் வெளியிடுவது ஆபத்தாபது.
பலஸ்தீனிய விடுதலை இயக்கம் தனது மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக இன்றும் விட்டுகொடுப்பற்ற போராட்டத்தை நடத்திவருகிறது. டக்ளஸ் தேவானத்தாவோ ஒடுக்கும் அரசின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டார்.
இலங்கை சிங்கள அதிகாரவர்க்கத்திடம் சரணடைந்த டகளஸ் தேவாந்தா, புலிகளை அழித்து சனநாயகத்தை மீட்பதற்காக மட்டுமே இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவதாகக் கூறிவந்தார். 2009 ஆண்டு விடுதலைப் புலிகள் என்ற இயகம் அழிக்கப்பட்ட பின்னான 11 வருடங்களில் டக்ளஸ் பேரினவாதக் கட்சிகளின் அடியாளகவே செயற்படுகிறார். ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்குப் பின்னர் இலங்கை அதி தீவிரமான இனவாத நச்சைக் கக்கும் இன்றைய கோத்தாபயவின் அரசோடு எந்த கூச்சமும் இல்லாமல் இணைந்து அமைச்சர் பதவியை வாங்கிக்கொண்ட டக்ளஸ், அரசியல் உரிமையற்ற அபிவிருத்தி – நிர்வாக அமைப்பாகச் செயற்படுவதாக தமிழ் மக்களிடம் கூறுகிறார். இதன் மறுபக்கத்தில் என்பதையே பேரினவாத அரசியலாக்கும் அரசோடு இணைந்துகொள்கிறார்.
விக்னேஸ்வரனின் அரசியல் அழுக்கை சமூகத்தின் சனநாயக முற்போக்கு சக்திகள் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் டகள்ஸின் விக்னேஸ்வரன் மீதான தாக்குதல் அவரை கதாநாயகனாக்கிவிடும். புலம்பெயர் பிழைப்புவாதிகளுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.ஆக, பேரினவாதமும் இலாப நோக்குடனான குறுகிய இனவாதமும் ஒன்றை ஒன்று வளர்த்தெடுக்கும் அரசியல் ஆரம்பமாகிவிட்டது.
இதன் இன்னொரு பக்கத்தில் மற்றொரு பேரினவாதக் கட்சியான சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இலங்கையின் இறைமைக்கு எதிரானது என வாந்தியெடுத்துள்ளார். சஜித் ஆகட்டும் கோத்தா – மகிந்த ஆகட்டும் வெறுப்பையும் பேரினவாதத்தையும் அதிகமாக விதைத்து அதனை வாக்குகளாக அறுவடை செய்துகொள்ளலாம் என்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.
ஆக, சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்திற்கு எதிரான பிரச்சாரமும் கற்பித்தலும் செயற்பாடுகளுமே இவர்களைப் பலவீனப்படுத்தும். விக்கியின் இனவாதமும், டக்ளசின் அடிமைத்தனமும் பேரினவாதிகளைப் பலப்படுத்தும்.
இலங்கையில் தமிழ்ப்பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்காக தமிழ், சிங்கள முற்போகு ஜனநாயக செயற்பாட்டாளர்கள் இணைய வேண்டும். இதன் ஊடாகவே இலங்கையில் அடிப்படை ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியும்.