Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வாஷிங்டனில் மாபெரும் போர் எதிர்ப்பு பேரணி:பல்லாயிரம் பேர் பங்கேற்பு.

 
நாடெங்கிலும் இருந்து திரண்ட பல்லாயிரக்கணக்கான அமெரிக்க மக்கள் வெள்ளை மாளிகை எதிரே உள்ள லாபாயெட்டே சதுக்கத்தில் கூடினர். பின்னர் அவர்கள் வாஷிங்டன் நகர வீதிகளில் பேரணியாக அணி வகுத்துச் சென்றனர். ராணுவ ஒப்பந்ததாரர் ஹல்லிபர்ட்டன் இல்லம், மார்ட்கேஜ் பேங்கர்ஸ் அசோசியேஷன் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் அலுவலகங் களின் முன் நின்று ஆர்ப் பாட்டம் நடத்தினர்.

இராக் மீது அமெரிக்கா படையெடுத்து ஏழு ஆண் டுகள் நிறைவுறுகின்றன. புஷ் நிர்வாகத்தின் கடைசி ஆண்டில் கூடியதைவிடக் குறைவான கூட்டம்தான் இம்முறை கூடியது. போர் எதிர்ப்பு பேரணியை ஆன் சர் கூட்டணி, வெட்ட ரன்ஸ் பார் பீஸ், மிலிட்டரி பாமிலிஸ் ஸ்பீக் அவுட் மற்றும் அரபு அமெரிக்கர் களின் தேசியக் குழு ஆகிய அமைப்புகளுடன் ரால்ப் நாடார் மற்றும் சின்டி ஷீஹான் ஆதரவாளர்களும் இயக்கத்தில் பங்கேற்றனர்.

ஆப்கானிஸ்தானில் துருப்புகளின் எண்ணிக்கை யை உயர்த்த ஒபாமா எடுத்த முடிவை எதிர்த்து இயக் கங்கள் எழுந்து வருவதை இப்பேரணி சுட்டிக்காட்டி யது. ஆப்கானிஸ்தான் மற் றும் இராக்கில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை நிபந்தனை யின்றி உடனடியாக திரும் பப் பெற வேண்டு மென்று கோரிக்கைகள் பேரணியில் வைக்கப்பட்டது.

ஒபாமா பதவியேற்ற பின் அமெரிக்காவின் வெளி யுறவுக் கொள்கைக்கு எதி ராக தேசிய அளவில் ஒருங் கிணைக்கப்பட்ட மாபெ ரும் இந்த எதிர்ப்பு பேரணி குறிப்பிடத்தக்கதாகும் என்று செய்திகள் கூறுகின் றன. ஜனவரி 2008 முதல் மவுனம் காத்த போர் எதிர்ப் பாளர்கள் முழக்கமிடத் தொடங்கிவிட்டனர்.

இரு போர் முனைகளில் மட்டும் அல்லாது உலகின் பல்வேறு இடங்களில், சம் பந்தப்பட்ட நாடுகளின் விருப்பம் இருந்தாலும் இல் லாவிட்டாலும் பதட்ட மான பகுதிகள் என்று அமெரிக்கா கருதும் இடங் களில் அதன் படைகள் நிறுத் தப்பட்டுள்ளன. போரில் செலவிடப்படும் பணத்தைக் கொண்டு ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் வேலை கொடுக்க முடியும், ஒவ் வொருவருக்கும் இலவச சுகாதாரப் பராமரிப்பு அளிக்க முடியும், கண்ணியமான பள்ளிகளையும், வசதியான வீடுகளையும் அளிக்க முடி யும் என்று இந்த அமைப்பு கள் கூறுகின்றன. அமெரிக்க வெளி யுறவுக் கொள்கைக்கு இவை சவால்விடும் அமைப்பு களாக மாறக்கூடும்.

Exit mobile version