அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில்லரை வணிகம் பல்தேசிய வியாபார நிறுவவங்களின் கட்டுப்பாட்டிற்குள்
ஐரோப்பா அமரிக்கா போன்ற நாடுகளைப் போலன்றி வறிய நாடுகளில் ஒன்றான இந்தியா சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களை அழித்து மக்களை மேலும் வறுமைக்கு உட்படுத்தும் நோக்கில் வால்மார்ட் போன்ற அழிப்பு நடத்தும் பல்தேசிய நிறுவனங்களை கையைப் பிடித்து அழைத்து வந்துள்ளன. சில்லரை வணிகத்தில் இலாபமடையும் அன்னிய நிறுவனங்களின் உள்ளூர்த் தரகர்களின் நலன்களுக்காகச் செயற்படும் இந்திய அரசு மக்களை மந்தைகளாகவே கருதுகின்றது,
தொலைத்தொடர்பு, காப்பீடு, பாதுகாப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீடு உச்சவரம்பை மத்திய அரசு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆனால் காங்கிரஸ் இவ்விவகாரத்தில் எந்த ஒரு மாற்றமும் இன்றி நிலையாக உள்ளது. வால்மார்ட் போனால், மற்றோரு மார்ட் வரும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஏன் அரசு இது தொடர்பாக யோசிக்கிறது? வணிகத்திற்காக இந்த கொள்கையை அரசு மேற்கொள்ளவில்லை. திறந்த உலகில் ஒரு தேசிய கொள்கையை தான். வால்மார்ட் போனால் அது போன்று நிறைய மார்ட்டுக்கள் உள்ளன. அவை அனைத்தும் வரும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜ் பாப்பர் தெரிவித்துள்ளார்.
தமது சொந்த நாடுகளையே அழித்துப் பச்சடி போட்ட நிறுவனனக்களை இந்தியாவைக் கொள்ளையடிப்பதற்கு வழி திறந்துவிடும் காங்கிரஸ் இந்தக் கொள்ளையைத் தேசியக் கொள்ளை என்கிறது.