Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வாரன் ஆண்டர்சனைத் தப்பவிட்டவர்கள் யார்?

1984-ல் நடந்த போபால் விஷ வாய்வுக் கசிவின் பொறுப்பாளியான அமெரிக்க முதலாளி வாரன் ஆண்டர்சனை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தலையிட்டு தனி விமானத்தில் அனுப்பி வைத்தார். இப்போது கூட ஆண்டர்சனை தப்பவிட்டது சரியே என்று மத்திய அமைச்சர் பிரணாப்முகர்ஜி கூறுகிறார். இந்நிலையில் யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனுக்கு ஜாமீன் வழங்கியது யார் என்பது குறித்து போலீஸ் நிலைய பதிவேட்டில் தகவல் இல்லை என்று மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் அம் மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
பேரவையில், பாஜக எம்எல்ஏ கிரிஜா சங்கர் சர்மா திங்கள்கிழமை எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சர் உமா சங்கர் குப்தா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். வாரன் ஆண்டர்சனும், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய இந்திய தலைவர் கேசுப் மகேந்திரா, முன்னாள் நிர்வாக இயக்குநர் வி.பி.கோகலே ஆகியோர் 1984 டிசம்பர் 7-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு மாநில அரசுக்கு சொந்தமான விமானத்தில் தில்லி சென்றுள்ளனர். இந்த தகவல்கள் ஹனுமன்கஞ்ச் போலீஸ் நிலைய பதிவேட்டில் உள்ளன. ஆனால், ஆண்டர்சனுக்கு ஜாமீன் வழங்கியது யார் என்பது குறித்த தகவல் இல்லை என்று உள்துறை அமைச்சர் உமா சங்கர் குப்தா கூறினார்.போபால் விஷவாயு கசிவு சம்பவத்தின்போது மாவட்ட எஸ்.பி.யாகப் பணியாற்றிய ஸ்வராஜ்புரிக்கு அறிவிக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவரின் வீரவிருதை வாபஸ் பெறுவது குறித்து மாநில அரசு எந்த பரிசீலனையும் மேற்கொள்ளவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version