கவச வாகனங்களைத் துளைத்து உள்ளே பயணம் செய்பவர்களைக் கொலைசெய்யும் வலுக்கொண்ட இக் குண்டுகள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்படுவதாகவும் அவற்றைக் கொண்டே ஈராக் இராணுவ அணிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளை ஆயுத மயப்படுத்தும் நோக்குடன் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு எதிராகப் போராடுவதாக இராணுவத்தைக் குவிக்கும் அமெரிக்க அரச பயங்கரவாதம் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளைத் தீனி போட்டு வளர்க்கிறது.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இத் துப்பாக்கிக் குண்டு ஒன்றின் பெறுமானம் 2500 டொலர்கள் பெறுமதியானது என அத் தகவல் மேலும் தெரிவிக்கிறது.
அதே வேளை, பிரித்தானியவின் சமாதானத்திற்கான அமைச்சகத்தை ஆரம்பித்தவரான ஜேம்ஸ் திரிங், பிரித்தானிய அரசு மத்திய கிழக்குப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கி வருவதாகத் தெரிவித்தார். சவூதி அரேபியா, காட்டார் போன்ற நாடுகள் அமெரிக்க அரசுடனும் பிரித்தானிய அரசுடனும் இணைந்து மத்திய கிழக்கை இராணுவ மயப்படுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.