Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வாடகை வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும் எமக்கும் தொடர்பில்லை : இந்திய அரசு

cvviki‘அயல் நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் தலையிடுவதில்லை’ என இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவையை அவிழ்த்துவிட்ட இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர், வடக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டதில் இந்தியாவிற்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்று வேறு கூறிவைத்திருக்கிறார்.
இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டமானாலும் சிங்களத் தொழிலார்கள் மீதான ஒடுக்குமுறையானாலும் இந்திய அரசின் அனைத்து உதவிகளும் இலங்கை அரசுக்கு உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விக்னேஸ்வரனை வாடகைக்கு அமர்த்தியதில் இந்தியாவின் பங்கு உண்டா இல்லையா என மற்றவகள் கூறுவது வேறுவிடையம் இந்தியாவே கூறுவது பலத்த சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது. இலங்கையின் அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்வதில் என்ன லாபம் கிடைக்கப் போகின்றது என்று வேறு குமார் கேட்டுவைத்திருக்கிறார். உத்திரப் பிரதேசத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களுக்குப் பயிற்சியளித்து அவற்றை அழித்து இந்திய இராணுவத்தை அனுப்பி போர்க்குற்றங்களை மேற்கொண்டு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இலங்கை அரச பாசிஸ்டுக்களுடன் இணைந்து நடத்திய இந்திய அரசை தமிழ்ப் பேசும் மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்

Exit mobile version