Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வாக்களித்தால் பெட்ரோல் லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடி : வாக்களிக்கவும் லஞ்சம்

Petrol_fuelதேர்தல் நாளில் வாக்களித்தால் பெட்ரோல் பங்குகளில் தள்ளுபடி,தியேட்டர்களில் இலவச பாப்கார்ன் மற்றும் குளிர் பானங்கள், வணிக வளாகங்களில் இலவச கூப்பன்கள் உள்ளிட்டவைகளை இம்முறை வாக்களர்கள் பெறமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள், கார்பரேட் நிறுவனங்கள் பல்பொருள் அங்காடிகள் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரத் தரப்புக்களும் இந்த அறிவித்தலை இந்தியா முழுவதும் விடுத்துள்ளன. தேர்தலில் நம்பிக்கையிழக்கும் மக்கள் சமூக மாற்றத்தை தோற்றுவிக்கும் புரட்சிகர வழிமுறைகளை நாட ஆரம்பித்துள்ளனர். இதற்காக மக்களுக்கு அதிகாரவர்க்கம் தேர்தலில் வாக்களிப்பதற்காக லஞ்சம் வழங்க முன்வந்துள்ளது. அதாவது, வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்களித்தன் அடையாளமாக கையில் ”மை” இருந்தால் தேர்தல் நாளில் 50 காசு தள்ளுபடி சலுகை அளிப்பதாக டெல்லியில் உள்ள 57 பெட்ரோல் பங்க்குகள் அறிவித்துள்ளன. இந்த தகவலை அனைத்து இந்திய பெட்ரோலிய சம்மேளனம் பொதுச்செயலாளர் அஜய் பன்சால் தெரிவித்தார்.

மேலும், இந்த திட்டத்தை மும்பை ஆந்திர பிரதேசம்,தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது.டெல்லியில் உள்ள சில தியேட்டர்கள் மையுடன் கூடிய விரலை காட்டினால் இலவச பாப்கார்ன் தருவதாகவும் தெரிவித்துள்ளன.

தேர்தலில் வாக்களிப்பதற்கே லஞ்சம் வழங்கவேண்டிய நிலைக்கு இந்தியாவில் ஒட்டவைக்கப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகம் செத்துவிட்டது என்பதையே இது குறித்து நிற்கிறது.

Exit mobile version