Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வவுனியா வந்த வன்னி மக்களுக்கு உதவ மட்டக்களப்பிலிருந்து 115 முஸ்லிம் உறவுகள் பயணம்.

வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு சமைத்து உதவுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 115 முஸ்லிம் உறவுகள் கடந்த சனிக்கிழமை வவுனியாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலியின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி நகரசபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் இவர்கள் புறப்பட்டுச் சென்றனர். இரண்டு பஸ் வண்டிகளிலும் ஒரு லொறியில் சமையல் பாத்திரங்களுடனும் இவர்கள் சென்றுள்ளனர்.

காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.அஸ்வர் தலைமையிலான குழுவினரை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினர் வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வில் நகரசபைத் தலைவர் யூ.எல்.எம்.என்.முயீன் , சம்மேளனத் தலைவர் எம்.ஐ.சுபைர், காத்தான்குடி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி மகிந்த சிறி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வன்னிக்குச் செல்லும் இவர்கள் ஓமந்தையில் உணவு சமைப்பது உணவு பரிமாறுவது மற்றும் தொண்டர்சேவை போன்ற நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் அமீர்அலி தெரிவித்தார்.

Exit mobile version