Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வவுனியா படைத்தளத்தில் இந்திய அதிகாரிகள் பணியாற்றியதனை இந்திய தூதரகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

10.09.2008

வவுனியாவில் இராணுவ மற்றும் விமானப்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய சமயம், அத்தளத்திலுள்ள ரேடார்களை பாராமரிப்பதற்காக அங்கு தற்காலிமாகத் தங்கியிருந்த இரண்டு இந்திய தொழில்நுட்பப் பணியாளர்கள் காயமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் தாக்குதலின்போது ராடார் கருவிகளை இயக்கும் இந்திய அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இராணுவதளத்தில் ரேடார் பராமரிப்பு வேலைகளுக்காக இந்திய ரேடார் தொழில்நுட்பப் பணியாளர்கள் தற்காலிகமாகத் தங்கியிருந்தார்கள் என்றும், தாக்குதலின்போது காயமடைந்த அவர்கள் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைபெற்று வருவதாகவும் இலங்கையிலுள்ள இந்திய தூதரகப் பேச்சாளர் திங்கர் அஸ்தானா தெரித்தார்.

இவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் உயிர் ஆபத்து அற்றவை என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த இராணுவத் தளத்தில் இந்தியப் பிரஜை எவரும் இருக்கவில்லை என்று இலங்கை இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்

Exit mobile version