அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ், சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரமொன்றை அடக்கும் போது இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று கூறினார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு மனித உரிமை மீறல் என்று அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ள தலைமை நீதியரசர் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்கும்போது இவ்வாறான மரணங்கள் ஏற்பட்டதாகவும் கூறினார். இவ்வாறான வழக்குகளை தொடர்ந்தும் விசாரிப்பதன்மூலம், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் தலைமை நீதியரசர் தெரிவித்தார்.
எனவே, குறித்த மனுவை தொடர்ந்தும் விசாரிப்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லை என்று தெரிவித்த தலைமை நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழு, வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.