இலங்கை இராணுவத்தின் வவுனியா முகாமில் 5 ஆயிரம் மனநோயாளர்களான இராணுவத்தினர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் ஒன்று கூறகின்றது. வன்னி யுத்ததில் ஈடுபட்ட இந்த இராணுவத்தினர் யுத்ததின் கோரத்தால் பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். தமது சொந்தக் கிராமங்களுக்குச் சென்றால் மக்கள் மத்தியில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் வவுனியா முகாமில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு மனநோய்க்கான சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிய வருகின்றது. இன்று இலங்கை அரசின் பாரிய சமூகச் சிக்கல்களுள் மனநோய்க்கு உள்ளான இராணுவத்தினரைப் பாதுகாப்பதும் ஒன்றாகும் எனத் தெரியவருகின்றது.
இலங்கை அரசு தமிழ்ப் பேசும் மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களையும் விலங்குகள் போன்றே நடத்திவருகிறது. போரை ஆதரித்த பேரினவாதக் கட்சிகளும், ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகளும் இது குறித்து வாய்திறக்க முடியாத நிலையிலேயே உள்ளனர்.
குறுகிய கால எல்லைக்குள் இராணுவ நோயாளிகளின் பிரச்சனை இலங்கையில் பெரும் சிக்கலாக உருவாக வாய்ப்புண்டு.