கடந்த செவ்வாயக்கிழமை (14.12.2010) காலை வவுனியா கச்சேரியில் பணிபுரியும் யுவதி (வயது 23) அலுவலகத்திற்குச் செல்லும் வேளையில் காணமல் போயுள்ளார். யுவதியின் பெற்றோர் பொலிஸில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி வவுனியா சேமமடுவைச் சேர்ந்த இளைஞன் ஒருவனும் (வயது22) வவுனியா நகரில் கடத்தப்பட்டதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே வேளை சில மாதங்களுக்கு முன்னர் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
வவுனியா நகரில் மக்கள் சுதந்திரமாக நடமாடக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது. சோதiனைச் சாவடிகள், பாதுகாப்புக் கெடுபிடிகள் குறைந்துள்ளன.
ஆயினும் படையினரின் தீவரி கண்காணிப்பு நிலவி வருகிறது. இருப்பினும் நகரில் வைத்து இந்தக் கடத்தல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
இNது வேளை யாழில் பல கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளமையும் மக்களை அச்சமடையச் செய்திருக்கிறது. இந்த நிலையில் யாழில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களுக்கு முன்னர் ஆயுதக்குழுக்களாக இருந்து ஜனநாயக வழிக்குத் திரும்பிய குழுக்களே காரணமென யாழ்.மாவட்ட அராசங்க அதிபர் தெரிவித்திருக்கிறார்.