தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சுமார் முப்பது வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தை துவங்கினர். ஆனால் தனது ஆடம்பர திருவிழாவான செம்மொழி மாநாடு நடக்கும் போது கோவையிலேயே தமிழுக்காக போராட்டம் நடத்துவதை விருப்பாத கருணாநிதி தனது கைப்பாவைகளான போலீசாருக்கு உடனடியாக போராட்டத்தைக் கலைத்து விடுமாறு கட்டளையிட்டார். ஆனால் கோவை நீதிமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடப்பதால் காவலர்கள் உள்ளே நுழைவதில் சிக்கல் ஏற்பட திமுக வழக்கறிர்களை ஏவிய போலீசார் அவர்களை விட்டு உண்ணாவிரதம் இருந்தவர்களைத் தாக்கி நீதி மன்றத்திற்கு வெளியே இழுத்துத் தள்ளினர்.இழுத்து வெளியே தள்ளப்பட்ட வழக்கறிஞர்களை பொலீசார் பிடித்து சிறையிலடைத்தனர். இதுதான் செம்மொழி நாயகனின் தமிழ் பற்று.