Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வழக்கறிஞர்களின் நிலை கவலைக்கிடம்? சிவதம்பியோ விருந்தில்……

தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் செம்மொழி விருந்து 600 கோடி ரூபாய் செலவில் கோவையில் துவங்கியுள்ளது. பல ஈழ அறிஞர்களும் இந்த மாபலி விருந்தில் கை நனைக்க கோவை சென்றுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களின் உடல் நிலை கவலைக்கிடமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கைது செய்யப்பட்டவர்களைச் சந்திக்க அவர்களின் உறவினர்களுக்கே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்களின் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டும் அவர்கள் குறித்த எந்த விதமான செய்தியையும் கருணாநிதியின் ஊடகங்களோ ஆளும் வர்க்க நீதிமன்றங்களோ பேசாமல் தவிரிக்கின்றன. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யபப்ட்ட மனுவில், ” வழக்கறிஞர்களைப்

பார்வையிட வழக்கறிஞர்கள் செல்ல அனுமதி கேட்டோம். சிறையில் உண்ணாவிரதத்தைத் தொடருபவர்களுக்கு அனுமதி அளிக்கச் சிறை விதிகளில் இடமில்லை என சிறை கண்காணிப்பாளர் அனுமதி மறுத்துவிட்டார்.

இந்நிலையில் அவர்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் உதவி அளிக்கவும், அவர்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும் வழக்கறிஞர்கள் குழுவுக்கு அனுமதி அளிக்கவேண்டும் அல்லது வழக்கறிஞர்கள் ஆணையரையோ, முடியாத பட்சத்தில் மாவட்ட நீதிபதி, உயர் நீதிமன்றப் பதிவாளர் ஆகியோரை ஆணையராக நியமித்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.சொக்கலிங்கம், துரைசாமி ஆகியோரடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் ஏ.கே.ராமசாமி அதற்கு பதிலலித்த அரசு கூடுதல் பிளீடர் ராஜசேகரன், மத்திய சிறையில் இருந்த வழக்கறிஞர்கள் மு.ராஜேந்திரன், ம.பா.நடராஜன், கு.ஞா.பகத்சிங், அ.விஜயபாரதி, பி.ஏ.கே.ராஜா ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சிகிச்சையை ஏற்க மறுத்து வருகின்றனர் என்றார். இந்தநிலையில், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் நியமித்தும் பயன் இல்லை. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர். எனவே,

மருத்துவமனையில் உள்ளவர்கள் நிலை குறித்து மதுரை மருத்துவக் கல்லூரி டீனும், சிறையில் உள்ள எழிலரசு குறித்து சிறை கண்காணிப்பாளரும் புதன்கிழமை காலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது டிவிஷன் பெஞ்ச்.

Exit mobile version