Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வோரே துரோகிகள்: விக்ரமபாகு

நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வோரே உண்மையான துரோகிகள் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் டொக்டர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த நாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சென்னை டோசோ மாநாட்டில் உரையாற்றியதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
உண்மையான நாட்டின் துரோகிகள் சர்வதேச நாணய நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் ஆதரவாக செயற்படுவோ என்பதனை ஜனாதிபதிக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
சர்வதேச சக்திகளின் பகடைகாய்களாக செயற்படுவோரே இந்த நாட்டின் உண்மையான துரோகிகள்.தற்போதைய அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மட்டுமன்றி நாட்டின் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றே டோசோ மாநாட்டில் வலியுறுத்தினேன். அனைத்து மக்களும் எதேச்சாதிகார அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றனர்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். ஈழம் என்ற சொல் தனி நாட்டை வெளிப்படுத்தவில்லை.நான் தெற்கைச் சேர்ந்தவன் என ஜனாதிபதி தெரிவிப்பதனைப் போன்றே ஈழம் என்ற சொல்லை வடக்கு கிழக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போதைய அரசாங்கத்தின் காரணமாகவே ஈழ தமிழர்கள் பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆட்சியாளர்களின் துரோகச் செயல்கள் பற்றி உலகின் எந்த நாட்டிலும் உரையாற்றத் தயார் என விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version